» சினிமா » செய்திகள்

பிரபல நடிகர் அம்ரீஷ் பூரியை கெளரவித்த கூகுள்!

சனி 22, ஜூன் 2019 5:31:36 PM (IST)மறைந்த இந்தி நடிகர் அம்ரீஷ் புரியின் பிறந்த நாளை முன்னிட்டு டூடுளில் அவரது சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.

திரையில் அதிகம் விரும்பப்பட்ட வில்லனாக வலம் வந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அம்ரீஷ்லால் புரி. பஞ்சாபில் 1932 ஆம் ஆண்டு இதே தினத்தில் பிறந்த இவர் இந்திய நாடகம் மற்றும் திரைப்படத் துறையில் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் பாலிவுட்டின் படங்களில் வில்லனாக நடித்து இந்திய திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களின் அடையாளமாக விளங்கினார். சேகர் கபூரின் இந்தி திரைப்படமான மிஸ்டர் இந்தியா (1987) என்ற திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரமான மொகாம்போ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் ஆதர்சமானவர். 

மேலும் மூன்று முறை சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான பிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றுள்ளார். தனது 39ஆவது வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அம்ரீஷ் புரி, தனது மறைவுக்குள்(2005) 400 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பாலிவுட், கன்னடம், மராத்தி, ஹாலிவுட், பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த்-மம்முட்டி நடித்த தளபதி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கலிவரதனாக அறிமுகமானவர். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் டெம்பிள் ஆஃப் டூம் திரைப்படத்தில் அம்ரீஷ் புரி ஏற்ற மோலா ராம் என்ற கதாபாத்திரம் இவருக்கு சர்வதேச கவனத்தை பெற்றுத்தந்தது.இன்று(ஜூன் 22) கூகுள் பக்கத்தில் காணப்படும் அம்ரீஷ் புரியின் வெள்ளை நிற குர்தாவும், கருப்பு நிற ஷாலும் அணிந்த இவரது டூடுள் சித்திரத்தை புனேவை சேர்ந்த திபன்க்ஷுமெளலிக் உருவாக்கியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory