» சினிமா » செய்திகள்

கரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது: ராமராஜன் எதிர்ப்பு!!

சனி 22, ஜூன் 2019 5:16:02 PM (IST)

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கூடாது என்று நடிகர் ராமராஜன் கூறியிருக்கிறார்.

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வெளியான படம் கரகாட்டக்காரன். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் 30வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக கங்கை அமரன் தெரிவித்தார்.  

இது குறித்து ராமராஜன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- கரகாட்டக்காரன் 2 பற்றி என்னிடமும் கங்கை அமரன் பேசினார். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சில வி‌ஷயங்களை திரும்ப தொடக்கூடாது. திரும்ப தொட்டா சரியா வராது. இப்போ இவங்க சொல்ற கரகாட்டக்காரன் 2 படம் கரகாட்டக்காரனைவிட 500 நாள் அதிகமா ஓடப்போற படம்னாலும் நான் பண்ணமாட்டேன். பொதுவா, இந்த பார்ட் டூல எனக்கு உடன்பாடு கிடையாது. முருகனோட அறுபடை வீடு இருக்குன்னா, பழநி, திருச்செந்தூர்னு வேற வேற பெயர்லதான் இருக்கு. ஏன், பழநி 1, பழநி 2னு அது இல்லைன்னு யோசிக்கணும். அதுமாதிரிதான் இதுவும். சில வி‌ஷயங்களை பார்ட் டூ பண்ணக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory