» சினிமா » செய்திகள்

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்: வைரமுத்து டுவிட்

செவ்வாய் 18, ஜூன் 2019 5:54:00 PM (IST)

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள்.

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து  நாடாளுமன்றத்தில் தமிழில்  உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-நாடாளுமன்றத்தில் தமிழில்  உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன். நாம் எந்த மொழியையும்  எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். பயணிப்போம் - மொழி காக்க தமிழையும் ஆட்சிமொழி ஆக்க என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிJun 20, 2019 - 09:39:27 AM | Posted IP 162.1*****

இன்னமாடா ஒன்ன இந்த உலகம் நம்புது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory