» சினிமா » செய்திகள்

ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேச்சு: இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு

செவ்வாய் 11, ஜூன் 2019 5:50:25 PM (IST)

ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் இயக்குநா் பா.ரஞ்சித். அண்மையில், தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஒசோழ மன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் தலித் மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் இருண்ட காலம் என்று பேசியிருந்தாா். இயக்குநா் ரஞ்சித்தின் கருத்து பெரும் சா்ச்சையை கிளப்பி உள்ளது. 

அவருக்கு  எதிராக சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ராஜராஜ  சோழன் குறித்து அவதூறாக பேசி வரும் இயக்குநா் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory