» சினிமா » செய்திகள்

சின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்கிறார் மைனா நந்தினி

சனி 8, ஜூன் 2019 5:42:42 PM (IST)



சின்னத்திரையின் பிரபல நடிகை  "மைனா" நந்தினி 2-வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஜோடியாக நடித்தவர் நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டி.வி. தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என்று இவரை அழைத்தனர்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஒரு வருடத்திலேயே கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

குடும்பத் தகராறில் மனம் உடைந்து உயிரை மாய்த்ததாக கூறப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள். நந்தினி கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு நந்தினி மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை காதலிப்பதாக நந்தினி அறிவித்து உள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

சாய்Jun 9, 2019 - 11:26:46 AM | Posted IP 162.1*****

கல்யாணம்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory