» சினிமா » செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் விஜய் 63 படத்தின் ஆடியோ உரிமை ரூ.5 கோடி?

வெள்ளி 7, ஜூன் 2019 5:37:14 PM (IST)

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் ஆடியோ உரிமை ரூ.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து 2017-ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது. இந்தப் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. "மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன்... பாடலை மட்டும் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். விஜய் கதாநாயகன், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் என்பதால் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து "மெர்சல் படத்தின் ஆடியோ உரிமை வாங்கப்பட்டது. அடுத்து விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி என இதே கூட்டணியில் "விஜய் 63 திரைப்படம் உருவாகி வருகிறது. 

இந்தப் படத்துக்காக, ஏ.ஆர்.ரஹ்மானின் சம்பளம் ரூ.5 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய் -63 படத்துக்கான ஆடியோ உரிமையை விற்று, அந்தப் பணத்தை அப்படியே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சம்பளமாக கொடுத்துவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆடியோ உரிமைக்கு ரூ.5 கோடி விலையாக நிர்ணயித்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. எனினும், இந்த உரிமையை வாங்க போட்டி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், அட்லி அவரது ஸ்டூடியோவில் அமர்ந்து இருக்கும் படத்தை வெளியிட்டு, விஜய் படத்துக்கான பாடல் ஒலிப்பதிவு தொடங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory