» சினிமா » செய்திகள்

மாநில அரசால் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார்; பேரறிவாளன் கேள்விக்கு ஆர்.டி.ஐ. பதில்

புதன் 5, ஜூன் 2019 12:27:20 PM (IST)

மகாராஷ்டிர மாநில அரசால் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார் என  பேரறிவாளன் கேள்விக்கு ஆர்.டி.ஐ. பதில் அளித்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை 5 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு குறைத்தது. மும்பை எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட அவர், தண்aடனை காலம் முடிவதற்கு முன்னே விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், எந்த அடிப்படையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புனே எரவாடா சிறை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார். இதில் அவருக்கு தகவல்கள் அளிக்கப்படாததை தொடர்ந்து மேல்முறையீடும் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு புனே தகவல் ஆணையம் முன்பு விசாரணை நடந்தது. அப்போது, தனது விடுதலை தொடர்பான தகவல்களை பேரறிவாளனுக்கு அளிக்கக்கூடாது என எரவாடா சிறை நிர்வாகத்துக்கு சஞ்சய் தத் கடிதம் எழுதியிருப்பதாக கூறிய சிறை அதிகாரி, அந்த கடிதத்தையும் சமர்ப்பித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பேரறிவாளன் தரப்பு வக்கீல் நிலே‌ஷ் உகே, ஒரு தண்டனை கைதிதான் மாநில அரசை வழிநடத்துவாரா? என கேள்வி எழுப்பினார்.  இந்நிலையில், இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத் விடுதலை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பேரறிவாளன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு உள்ளது. இந்த பதிலில், நடிகர் சஞ்சய் தத் மகாராஷ்டிர அரசால் விடுதலை செய்யப்பட்டார்.  அவரை விடுவிப்பது பற்றி மத்திய அரசுடன் எவ்வித அதிகாரப்பூர்வ தொடர்பும் இல்லை என எரவாடா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து பேரறிவாளனை விடுவிப்பது பற்றி தமிழக முதல் அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory