» சினிமா » செய்திகள்

இம்சை அரசன் 24-ம் புலிகேசி விரைவில் தொடங்கும்: இயக்குநர் சிம்பு தேவன் நம்பிக்கை!

செவ்வாய் 21, மே 2019 4:11:55 PM (IST)

"இம்சை அரசன் 24-ம் புலிகேசி" விரைவில் தொடங்கும் என்று இயக்குநர் சிம்பு தேவன் கூறியுள்ளார்.

இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சிம்புதேவன், அடுத்ததாக வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் புதிய படமொன்றை இயக்கியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் சிம்பு தேவன் கூறியுள்ளதாவது: வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் அடுத்தப் படத்தை இயக்கியுள்ளேன். டிரெண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

குறுகிய காலத்தில் என்னுடைய படம் முடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆதரவுடன் இன்று முதல் படத்தின் விளம்பர வேலைகள் ஆரம்பித்துள்ளன. உங்களுக்குப் பிடித்த படமாக இது இருக்கும். எல்லாவிதமான நேர்மறை எண்ணங்களுடன் விரைவில் இம்சை அரசன் படமும் மீண்டும் ஆரம்பமாகும் என நம்புகிறேன். இந்த நேரத்தில் வெங்கட் பிரபுவுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory