» சினிமா » செய்திகள்

மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் : ஒப்பந்தம் கையெழுத்தானது

திங்கள் 20, மே 2019 12:38:12 PM (IST)

நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் நேர்கொண்ட பார்வை. வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.  இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காகும். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. சிவா, விஷ்ணுவர்தன், எச்.வினோத் என்று பல பெயர்களும் அடிபட்டது. பிங்க் ரீமேக் கையெழுத்திட்ட போது, முதலில் இந்தப் படம் பண்ணுங்கள். இதற்குப் பிறகு உங்களுடைய நேரடி கதையில் நடிக்கிறேன் என்று எச்.வினோத்துக்கு அஜித் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது.  

இதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் டப்பிங் பணிகளுக்கு இடையே, அஜித் ஒ.கே சொன்ன கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார் எச்.வினோத். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory