» சினிமா » செய்திகள்

பணம், புகழைவிட சுயமரியாதைதான் முக்கியம்: அக்ஷய்குமார் படத்திலிருந்து விலகிய லாரன்ஸ்!

திங்கள் 20, மே 2019 11:00:11 AM (IST)பணம், புகழைவிட சுயமரியாதைதான் முக்கியம் என்பதால் பலக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை லக்ஷ்மிபாம் எனும் பெயரில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அக்ஷய் குமார் இதில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்ஷய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். மதியாதார் தலைவாசல் மிதியாதே எனும் தமிழ் பழமொழிக்கு ஏற்ப இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "மதியாதார் தலைவாசல் மிதியாதே என தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகத்தில் பணம், புகழை தாண்டி, சுயமரியாதை தான் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். எனவே லக்ஷ்மி பாம் படத்தில் இருந்து நான் விலக முடிவு செய்துள்ளேன். இந்த முடிவை எடுத்ததற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். எனக்கு தெரியாமலேயே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மூன்றாவது நபர் சொல்லி தான் அது எனக்கு தெரியும். மேலும் அந்த போஸ்டர் அவ்வளவு நன்றாகவும் இல்லை.

படத்தின் இயக்குனரான என்னை கேட்காமல், எனக்கு தெரியாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது எனக்கு அவமரியாதையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் எந்த இயக்குனருக்கும் ஏற்படக் கூடாது. என்னால் இந்த படவேலைகளை அப்படியே பாதியில் நிறுத்த முடியும். ஏனென்றால் நான் எவ்வித ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. ஆனால், நான் அப்படி செய்ய மாட்டேன். ஏனென்றால் அது தொழில் தர்மம் ஆகாது.

நான் எனது பட ஸ்கிரிப்டை அப்படியே தர தயாராக இருக்கிறேன். காரணம், அக்‌ஷய்குமார் சார் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். அவர்கள் விருப்பம் போல் வேறு இயக்குநரை வைத்து இப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். விரைவில் நேரில் சென்று அக்‌ஷய்குமாரை சந்தித்து இந்த ஸ்கிரிப்டை அவரிடம் ஒப்படைத்து விட்டு, நல்ல முறையில் இப்படத்தில் இருந்து நான் வெளியேறி விடுவேன். லக்‌ஷ்மி பாம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியில் இப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory