» சினிமா » செய்திகள்

என்னுடன் ப்ரியா பவானி சங்கர் நடிக்க பயந்தது ஏன்?: எஸ்.ஜே. சூர்யா விளக்கம்

ஞாயிறு 19, மே 2019 9:09:51 AM (IST)

மான்ஸ்டர் படத்தில் ப்ரியா பவானி சங்கர் தன்னுடன் நடிக்க பயந்ததற்கான காரணத்தை எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார் .

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர், எலி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மான்ஸ்டர்.எஸ்.ஜே. சூர்யாவும், எலியும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக, எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க பயந்ததாக ப்ரியா பவானி சங்கர் தெரிவித்தார். அவர் ஏன் அப்படி சொல்லியிருப்பார் என்பதற்கான காரணத்தை சூர்யா தற்போது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ப்ரியா பவானி சங்கர் மாணவியாக இருந்தபோது நான் நடித்த நியூ உள்ளிட்ட படங்களை பார்த்திருப்பார். குடும்ப குத்துவிளக்காக இருக்கும் நாம் அவருடன் ஜோடியாக நடித்தால் சரிபட்டு வருமா என்று அவர் பயந்திருக்கலாம். சிம்ரன், நிலா ஆகியோரை அடுத்து எனக்கு ஏற்ற ஜோடியாக உள்ளார் ப்ரியா பவானி சங்கர். மான்ஸ்டர் படத்தில் கவர்ச்சி எதுவும் இருக்காது. நல்ல கதை கிடைத்தால் தொடர்ந்து வில்லனாக நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார் சூர்யா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory