» சினிமா » செய்திகள்

மன்னன் படத்தின் ரீமேக் அல்ல Mr. லோக்கல் : சிவகார்த்திகேயன் விளக்கம்

செவ்வாய் 14, மே 2019 10:42:24 AM (IST)Mr. லோக்கல் படம் மன்னன் படத்தின் ரீமேக் அல்ல என நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற 17-ம் தேதி ரிலீஸாகும் படம் Mr. லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படம், ரஜினி, விஜயசாந்தி நடிப்பில் வெளியான மன்னன் படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, "நிச்சயமா இது மன்னன் ரீமேக் கிடையாது. 

ஆனால், மன்னன் படத்திலும் ஒருவருக்கு ஒருவர் போட்டி இருக்குமில்லையா... அது இந்தப் படத்துல கொஞ்சம் இருக்கும். அதோட ஜாலியான வெர்ஷனா இருக்கும். தலைவரோட மாஸ், ஸ்டைல் அப்படினு கொஞ்சம் சீரியஸா இருக்கும். இது செம ஜாலியா இருக்கும். சமூக அக்கறை, கருத்து என இந்தப் படத்தில் எதுவும் கிடையாது. வேலைக்காரன் படம் முழுக்க கருத்து சொல்லிட்டோம். இது முழுக்க முழுக்க காமெடிப் படம், கொஞ்சம் எமோஷன்ஸ் இருக்கும். காமெடிப் படங்களில் நடிப்பது எனக்குப் புத்துணர்ச்சியாக இருக்கிறது. ரெமோவுக்குப் பிறகு இந்தப் படத்துலதான் நிறைய காமெடி பண்ணிருக்கேன். இனிமேல், மூன்று படங்களுக்கு ஒருமுறை முழு காமெடிப் படத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory