» சினிமா » செய்திகள்

உதவியாளரை கொல்ல முயன்றதாக புகார் : நடிகர் பார்த்திபன் விளக்கம்

வெள்ளி 10, மே 2019 12:49:57 PM (IST)

தன் மீதான கொலை முயற்சி புகாருக்கு ட்விட்டரில் காமெடியாக விளக்கம் அளித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.

இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்த ஜெயங்கொண்டான் என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார். திருவான்மியூர் வீட்டில் கொள்ளை நடந்த பிறகு ஜெயங்கொண்டான் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை கேட்க சென்ற இடத்தில் பார்த்திபன் தன்னை அடித்து, மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யப் பார்த்ததாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, "பார்த்திபன் கொலை செய்ய முயற்சி" Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது!என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர். மகிழ்ச்சி! என்று தெரிவித்துள்ளார். தன் மீது புகார் அளித்தவர் பற்றியும் காமெடியாக ட்வீட் செய்துள்ளார் பார்த்திபன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory