» சினிமா » செய்திகள்

டிஆர்பியில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம்... சர்காரை பின்னுக்கு தள்ளியது!

வெள்ளி 10, மே 2019 12:45:12 PM (IST)

சன் டிவியில் ஒளிபரப்பான விஸ்வாசம் படம் அதிக வரவேற்பை பெற்று டிஆர்பியில் புதிய சாதனை படைத்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்த படம் விஸ்வாசம். இதில், நயன்தாரா, ஜகபதிபாபு, தம்பி ராமையா, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்னர். இப்படம், ரிலீசான தேதியில் இருந்து முதல் ஆறு வாரங்கள் வரை அரங்குகள் நிறைந்த காட்சியாக ஓடியது. இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என அனைவருக்கும் இந்த படம் நல்ல லாபத்தை பெற்றுத் தந்தது. 

விஸ்வாசம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இப்படம் கடந்த வாரம் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தையொட்டி ஒளிபரப்பப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு விஸ்வாசம் படத்துக்கு அதிக டிஆர்பி கிடைத்துள்ளது. அதாவது, அதிகபடியான மக்கள் விஸ்வாசம் படத்தை சன் டிவியில் பார்த்திருக்கின்றனர். இந்த படத்தை 18.1 மில்லியன் பேர், அதாவது ஒரு கோடியே 81 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இதுவரை திரையிடப்பட்ட படங்களில் விஸ்வாசம் தான் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, பிச்சைக்காரன் படமும், அடுத்த இடத்தில் பாகுபலி 2ம், 4வது இடத்தில் சர்கார் திரைப்படமும் உள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள், விஸ்வாசம் திரைப்படம் டிஆர்பியிலும் சர்கார் படத்தின் சாதனையை முறியடித்துவிட்டது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory