» சினிமா » செய்திகள்

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படம் பூஜையுடன் தொடங்கியது!

புதன் 8, மே 2019 4:22:17 PM (IST)



இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‍ நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‍மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இன்று, பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் தேர்வாகியுள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். இப்படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory