» சினிமா » செய்திகள்

ராம் கோபால் வர்மா இயக்கிய என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை!!

வியாழன் 2, மே 2019 12:53:22 PM (IST)ராம் கோபால் வர்மா இயக்கிய என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்திற்கு ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவிவேதி தடை விதித்துள்ளார். 

ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா, ‘லட்சுமி‘ஸ் என்.டி.ஆர்.‘ என்ற தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். இதில், தற்போதைய முதல்-அமைச்சர்  சந்திரபாபு நாயுடுவை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. எனவே, இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆந்திராவில் தேர்தல் முடிந்த பிறகு படத்தை திரையிடலாம் என அனுமதி வழங்கியது. 

அதன்படி, மே 1-ம் தேதி (நேற்று) படத்தை வெளியிட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் ராம் கோபால் வர்மா செய்தார். இந்நிலையில், அப்படத்தை திரையிட ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவிவேதி தடை விதித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறை களை சுட்டிக்காட்டி, இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். "இதற்கு பின்னால் உள்ள சக்தி யார் என்று எங்களுக்கு தெரியும்" என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார். மேலும், இதுபற்றி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டதற்கு "சினிமா வெளியீடு குறித்து நான் எப்படி அக்கறை கொள்ள முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory