» சினிமா » செய்திகள்

நடிகை ஸ்ருதி ஹாசனை பிரிந்தார் லண்டன் காதலர்!!

சனி 27, ஏப்ரல் 2019 3:52:13 PM (IST)நடிகை ஸ்ருதிஹாசனுடனான காதல் முறிந்துவிட்டதாக அவரது லண்டன் காதலர் உறுதிப்படுத்தி உள்ளார். 

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர். லண்டனில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இவருக்கும், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர். மைக்கேலை இந்தியாவுக்கு அழைத்து வந்து தந்தை கமல்ஹாசன், தாய் சரிகா ஆகியோரிடம் ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தினார். திருமண நிகழ்ச்சியொன்றில் தனது காதலர் மைக்கேலுடன் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து அணிந்து கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகின.

மேலும், ஸ்ருதிஹாசன் சில வருடங்களாக புதிய படங்களில் நடிக்கவில்லை. எனவே இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் - மைக்கேல் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த மைக்கேல் புகைப்படங்களை நீக்கி மீண்டும் புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக பதிவிட்டுள்ளார். மைக்கேலும் டுவிட்டரில் காதல் முறிந்ததை உறுதிப்படுத்தி உள்ளார். நாங்கள் தனித்தனி பாதையில் பயணிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

தம்பிமே 17, 2019 - 07:22:27 PM | Posted IP 108.1*****

சிறப்பான பரம்பரை

தம்பிApr 30, 2019 - 10:02:42 AM | Posted IP 172.6*****

ஒரு லிமிட்டுக்கு மேல சலிச்சிருச்சு - அடுத்த இடம் பாக்க வேண்டியதுதான்

நிஹாApr 29, 2019 - 12:07:07 PM | Posted IP 172.6*****

நாட்டுக்கு மிக முக்கியமான செய்தி.

சாமிApr 29, 2019 - 10:01:29 AM | Posted IP 172.6*****

இதெல்லாம் எதிர்பாராத ஒன்றல்ல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory