» சினிமா » செய்திகள்

அஜித்தின் ஆஸ்தான இயக்குநருடன் இணைந்த சூர்யா!!

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 5:43:33 PM (IST)

சூர்யா நடிக்கும் புதிய படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான  சிவா இயக்க உள்ளார். 

சூர்யா நடிப்பில் தற்போது ஒரே நேரத்தில் 3 படங்கள் தயாரிப்பில் உள்ள நிலையில் மற்றொரு படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித், நயன்தாரா இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் விஸ்வாசம். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தை இயக்கிய சிவா, அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் என்று சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்து 4 படங்களை அஜித்தை கதாநாயகனாகக் கொண்டு இயக்கினார். 

அடுத்த திரைப்படத்திலும் இந்தக் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டபோது தற்போது சிவா - சூர்யா கூட்டணி உருவாகியுள்ளது. சிறுத்தை படத்தின் பணிகளில் ஈடுபட்டு வந்தபோதே ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சிவா உடன் இணைந்து இரு படங்களில் பணியாற்றுவதாக ஒப்பந்தம் செய்தது. அதன்படியே தற்போது சூர்யா நடிக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. 

நேற்று மாலை இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்தப் படத்தில் நடிக்கும் நாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.மேலும், சூர்யா படத்தை முடித்துவிட்டு, மீண்டும் அஜித் நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory