» சினிமா » செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினேன்: நடிகை ராதிகா அதிர்ச்சி!!

திங்கள் 22, ஏப்ரல் 2019 11:53:48 AM (IST)

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றபோது அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், கிங்க்ஸ் பெரி ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை சென்றிருந்த நடிகை ராதிகா சரத்குமார் சின்னமன் கிராண்ட் ஓட்டலில்தான் தங்கி இருந்துள்ளார். குண்டு வெடிப்பு நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு அங்கிருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், "நான் சின்னமன் ஓட்டலில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்துள்ளது. இது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இந்த அதிர்ச்சியை என்னால் நம்ப முடியவில்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory