» சினிமா » செய்திகள்

மீ டூ’ புகார் எதிரொலி: நடிகர் சங்கத்தில் 9 பேர் குழு நியமனம்

சனி 20, ஏப்ரல் 2019 4:53:16 PM (IST)

சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட "மீ டூ" குழு அமைக்கப்பட உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகை சில மாதங்களாக "மீ டூ" இயக்கம் உலுக்கி வருகிறது. பட வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை நடிகைகள் மீ டுவில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கி உள்ளனர். தெலுங்கு பட உலகை நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்கள் சொல்லி அதிரவைத்தார்.

"மீ டூ"வுக்கு ஆதரவும், அதை சில நடிகைகள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. திரையுலகில் நடிக்கும் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் "மீ டூ" ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது.

இந்த குழுவின் தலைவராக நடிகர் சங்க தலைவர் நாசர் செயல்படுவார். சங்க உறுப்பினர்களாக விஷால், கார்த்தி, பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பு, ரோகிணி, சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர், வக்கீல் உள்பட 8 பேர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திரையுலகில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் "மீ டூ" ஒருங்கிணைப்பு குழுவில் புகார் செய்யலாம். குழுவினர் நேரில் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.திரையுலகில் பணியாற்றும் பெண்களுக்கான பாதுகாப்பையும் இந்த குழு உறுதி செய்யும். மீ டூ குழு அமைக்கப்படுவதன் மூலம் தமிழ் பட உலகில் பாலியல் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory