» சினிமா » செய்திகள்

உரிமைக்காக போராடுங்கள்: நடிகர் சிவகார்த்திகேயன்!

வியாழன் 18, ஏப்ரல் 2019 5:18:17 PM (IST)

"கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன், உரிமைக்காக போராடுங்கள்!" என கூறினார்.

நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் நடிகர் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது ஆனால் கடும் போராட்டத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறும் போது வாக்களிப்பது உங்கள் உரிமை; அந்த உரிமைக்காக போராடுங்கள் என கூறினார்.


மக்கள் கருத்து

சாமிApr 23, 2019 - 06:28:18 PM | Posted IP 172.6*****

இதில் போராட்டம் என்ன வேண்டி இருக்கிறது - வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா என்று சரி பார்த்து இருக்க வேண்டியது அவரது கடமை - அதை மறந்துவிட்டு யாரையோ குறை சொல்வானேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory