» சினிமா » செய்திகள்

மம்முட்டி, மோகன்லாலை விட கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் : எம்.எல்.ஏ. பேச்சு

புதன் 13, பிப்ரவரி 2019 4:26:04 PM (IST)

கேரளாவில் மம்முட்டி, மோகன்லாலை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் என அம்மாநில எம்எல்ஏ ஜார்ஜ்  கூறியுள்ளார். 

விஜய் நடித்த படங்கள் கேரளாவிலும் வெற்றிகரமாக ஓடுகின்றன. மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக வசூல் ஈட்டுகின்றன. ஜில்லா, துப்பாக்கி, தலைவா, தெறி, மெர்சல், சர்கார் உள்ளிட்ட பல படங்கள் அங்கு நல்ல வசூல் பார்த்துள்ளன.

கேரள வினியோகஸ்தர்களும் விஜய் படங்களை அதிக விலைக்கு வாங்கி வெளியிட்டு லாபம் பார்க்கிறார்கள். விஜய் படங்களுடன் போட்டியிடாமல் மலையாள நடிகர்கள் தங்கள் படங்கள் வெளியீட்டை தள்ளி வைக்கும் நிலையும் உள்ளது. விஜய் படங்கள் வெளியாகும்போது கேரள ரசிகர்கள் தியேட்டர்களில் கட்-அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என்று அமர்க்களப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் மலையாள நடிகர்களை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்று கேரள எம்.எல்.ஏ. ஜார்ஜ் பரபரப்பாக பேசினார். டி.வி. நிகழ்ச்சியொன்றில் அவர் பங்கேற்று பேசும்போது, "கேரள தியேட்டர்களில் விஜய் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை நான் உள்பட பலரும் பார்த்து இருக்கிறோம். கேரளாவில் மலையாள நடிகர்களை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்” என்றார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மம்முட்டி, மோகன்லால் ரசிகர்கள் ஜார்ஜை சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகிறார்கள். "விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது உண்மைதான். ஆனால் மலையாள நடிகர்களை விட அதிக ரசிகர்கள் இருப்பதாக சொல்வதை ஏற்க முடியாது” என்று அவர்கள் கருத்து பதிவிடுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory