» சினிமா » செய்திகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணப் பொருள்கள் வழங்கும் விஜய் சேதுபதி!

திங்கள் 19, நவம்பர் 2018 5:24:42 PM (IST)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண உதவியாக வழங்கவுள்ளார்  விஜய் சேதுபதி.

தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால், இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப் பகுதிகள் மிக கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. அனைத்து வகை விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், விவசாயிகளின் 20 ஆண்டு கால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல் சீற்றம். இதனால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை (சார்ஜிங் டார்ச்லைட், தென்னை - பலா மரக்கன்றுகள்) நிவாரண உதவியாக வழங்கவுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் களப்பணிகளில் தன்னுடைய ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.புயல் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory