» சினிமா » செய்திகள்

சிவாஜி பேரனுடன் பிக் பாஸ் சுஜா வருணி திருமணம்

திங்கள் 19, நவம்பர் 2018 5:18:22 PM (IST)சிவாஜி பேரனுடன் பிபிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணியின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது.

2002-ம் ஆண்டு வெளியான ப்ளஸ் 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுஜா வருணி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஆண் தேவதை. படங்களின் மூலம் புகழ் கிடைக்காவிட்டாலும், கடந்த வருடம் (2017) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைத்தது. குறிப்பாக, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனை அவர் அப்பா என்றுதான் அழைத்தார்.

சுஜா வருணியும், நடிகர் சிவகுமாரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். சிவகுமார், நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனும் ஆவார். சிங்கக்குட்டி, புதுமுகங்கள் தேவை உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார். சிவகுமார் சிவாஜி தேவ் என்றும் அழைக்கப்படுகிறார். இவர்கள் இருவருக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது. நடிகர்கள் சிவகுமார், அஸ்வின், எம்.எஸ்.பாஸ்கர் கவிஞர் சினேகன், திமுகவைச் சேர்ந்த துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விஷ்ணுவர்தன், நடிகைகள் ஸ்ரீப்ரியா, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், லிஸி, வடிவுக்கரசி, காதல் சந்தியா, விஜி சந்திரசேகர்,  ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory