» சினிமா » செய்திகள்

காஜல் அகர்வாலை முத்தமிட்டது ஏன்? ஒளிப்பதிவாளர் விளக்கம்

வியாழன் 15, நவம்பர் 2018 11:44:03 AM (IST)

ஐதராபாத்தில் நடந்த சினிமா விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்டது குறித்து ஒளிப்பதிவாளர்  சோட்டா கே.நாயுடு விளக்கம் அளித்துள்ளார். 

தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெல்லம் கொண்டா சீனிவாஸ், காஜல் அகர்வால், மெஹ்ரின் ஆகியோர் நடித்துள்ள கவச்சம் என்ற தெலுங்கு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. 

மேடையில் காஜல் அகர்வால் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு திடீரென்று தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று காஜல் அகர்வாலை இறுக்கமாக கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இது காஜல் அகர்வாலுக்கு தர்ம சங்கடமாக இருந்தாலும் சிரித்தபடி வேறு வி‌ஷயங்கள் பற்றி பேச ஆரம்பித்தார். ஒளிப்பதிவாளரின் செயல் பார்வையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. 

காஜல் அகர்வால் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்கி ஒளிப்பதிவாளரை கண்டித்து வருகிறார்கள். ‘‘இதுவும் மீ டூ போன்றதுதான். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை முத்தமிட்டது இழிவான செயல். சோட்டா கே.நாயுடுவை கண்டிக்கிறோம்’’ என்றெல்லாம் கருத்துக்கள் பதிவிடுகிறார்கள்.இதற்கு விளக்கம் அளித்துள்ள சோட்டா கே.நாயுடு, ‘‘மறைந்த நடிகை சவுந்தர்யாவுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகை காஜல் அகர்வால். உள்நோக்கம் இல்லாமல் சாதாரணமாகவே அவருக்கு முத்தமிட்டேன்’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory