» சினிமா » செய்திகள்

சுடுங்கடா அந்த குருவிய.. 2.0 டிரெய்லரில் ரஜினி பன்ச்!

சனி 3, நவம்பர் 2018 5:10:07 PM (IST)


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. 

மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் கோலாகலமாக நடத்தினர். மேலும், சமீபத்தில் வெளியான டீஸர் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறாத நிலையில், இன்று அப்படத்தின் டிரெய்லர் லான்ச் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏஆர் ரஹ்மான், எமி ஜாக்சன், உட்பட படக்குழுவினர் அனவரும் வருகை தந்துள்ளனர்.

நிகழ்ச்சியை ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆரம்பமாக கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய புல்லினங்கால் பாடல் ஒளிபரப்பப்பட்டது. ஹோண்டா நிறுவனத்தின் புது மாடல் பைக்கை அறிமுகப்படுத்தினார் அக்‌ஷய் குமார். பிறகு, இந்திரலோகத்து சுந்தரியே பாடல் ஒளிப்பரப்பட்டது. மேலும், 2.0 படத்தின் டிரெய்லர் ஸ்கிரீன் செய்யப்பட்டது. அதில் சிட்டி ரோபோ பேசும் சுடுங்கடா அந்த குருவிய... என்ற வசனம் அரங்கை அதிர செய்தது.

ஆர்.ஜே. பாலாஜி, இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானை மேடைக்கு அழைத்தார். பாடல்கள் உருவான விதம் பற்றி பேசினார். செலிபிரட்டிகள் ட்விட்டரில் கேட்ட சில கேள்விகளை பாலாஜி ரஹ்மானிடம் கேட்க, அந்த கேள்விகளுக்கு பதிலளித்தார், ரஹ்மான். உங்களுக்கு பிடிச்ச ஹீரோ யார்? என்று வீடியோவில் அனிருத் கேள்வி கேட்க, அதற்கு சூப்பர் ஸ்டார்தான் என பதலளித்தார் ஏ.ஆர்.ஆர். காரணம் என்ன என்று பாலாஜி கேட்க, இந்த வயதிலும் அவரோட எஃபோர்ட்தான் காரணம். ஆஸ்கர் வாங்கியாச்சு. நான் நாற்பது வயசில ரிடையர்ட் ஆகிடலாம்னு நினைச்சேன். ஆனா ரஜினி சாரை பார்த்தேன். அவர் இன்னும் அதே சுறுசுறுப்புடன் இருக்கார்னு என் முடிவை மாத்திக்கிட்டேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory