» சினிமா » செய்திகள்

விக்ராந்த் படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதும் விஜய் சேதுபதி

வெள்ளி 26, அக்டோபர் 2018 2:20:58 PM (IST)

விக்ராந்த் நடிக்கும் படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை விஜய் சேதுபதி ஏற்றுள்ளார்.

நடிகர் விக்ராந்த் இயக்குனர் சஞ்ஜீவ் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதும் பொறுப்பை நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுள்ளார். இது குறித்து இயக்குனர் சஞ்ஜீவ் கூறும் பாேது, விஜய் சேதுபதி கையில் அரை டஜன் படங்கள் உள்ளன. இந்தச் சமயத்தில் ஒரு படத்துக்கு வசனம் எழுதும் அளவுக்கு நேரம் இருக்குமா? இதற்கு முன்பு ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு வசனம் எழுதிய அனுபவம் இருந்தபோதும் தற்போது உள்ள நேர நெருக்கடியில் இது சாத்தியமா என்கிற சந்தேகம் எழுந்தது.. 

ஆனால் தினமும் படப்பிடிப்புப் பணிகள் எல்லாம் முடித்துவிட்டு இரவு நேரங்களில் அப்படத்தின் கதை, திரைக்கதை குறித்து ஓயாது விவாதித்துள்ளார் விஜய் சேதுபதி. சொன்னபடி திரைக்கதையை உருவாக்கி, வசனமும் எழுதித் தந்துள்ளார். நானும் என் சகோதரர் விக்ராந்தும் அவருக்கு எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளோம் என்றார். நவம்பர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory