» சினிமா » செய்திகள்

சாமியார் நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் : நடிகை கஸ்தூரி சர்ச்சை டுவீட்

திங்கள் 8, அக்டோபர் 2018 6:29:46 PM (IST)

நித்யானந்தாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சாமியார் நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் இருந்து அவரை கடவுள் போன்று சித்தரித்து பரமசிவோகம் ஒன்னெஸ் கேப்சூல் 50 என்ற ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அதில், நித்யானந்தாவை கடவுளாக்கி ஆங்கிலத்தில் ஆல்பம் பாடப்பட்டுள்ளது. கோவிலுக்குள் இருப்பது போன்று இருக்கும் இந்த ஆல்பத்தில் அவரது ஜடாமுடி மீசை பற்றியெல்லாம், பாடல் பாடப்பட்டுள்ளது. பரமஹம்ச நித்யானந்தா என்ற தொடங்கும் இந்தப் பாடல் இலக்கிய தரத்துடன் வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த கஸ்தூரி நித்யானந்தாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று நக்கலாக டுவிட் பதிவு செய்துள்ளார். 


மக்கள் கருத்து

சாமிOct 10, 2018 - 04:16:52 PM | Posted IP 141.1*****

இவளுக்கு?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory