» சினிமா » செய்திகள்

பிக் பாஸ் பிரபலங்களுடன் சேர்ந்து சிசிவி பார்த்த சிம்பு

புதன் 3, அக்டோபர் 2018 3:49:57 PM (IST)



பிக் பாஸ் பிரபலங்களுடன் சேர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தைப் பார்த்துள்ளார் சிம்பு.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் செக்கச்சிவந்த வானம். அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா, பிரகாஷ் ராஜ் என நிறைய நட்சத்திர நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள செக்கச்சிவந்த வானம் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 27-ம் தேதி வெளியான இந்தப் படம், பெரும்பாலானவர்களுக்குப் பிடித்திருந்தது. இந்நிலையில், பிக் பாஸ் பிரபலங்கள் சிலருடன் சேர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தைப் பார்த்துள்ளார் சிம்பு. பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், இரண்டாவது சீசனில் வெற்றிபெற்ற ரித்விகா மற்றும் ஜனனி, மஹத், ஐஸ்வர்யா தத்தா ஆகியோருடன் இணைந்து, நேற்றிரவு படத்தைப் பார்த்துள்ளார் சிம்பு. சிம்புவுடன் சேர்ந்து பிக் பாஸ் பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory