» சினிமா » செய்திகள்

தனுஷ் இயக்கி நடிக்கும் படம்: பூஜையுடன் தொடங்கியது!

சனி 8, செப்டம்பர் 2018 12:09:21 PM (IST)



தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் தனுஷ் பா. பாண்டி படம் வெளியான அடுத்த வருடமே மற்றொரு படத்தைத் தொடங்கியுள்ளார். இந்தமுறை அவர் இயக்கும் படத்துக்கு அவரேதான் கதாநாயகன்.  ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. 

தனுஷ், அதிதி ராவ் ஹைதரி, நாகர்ஜூனா, எஸ்.ஜே. சூர்யா, சரத் குமார், ஸ்ரீகாந்த் போன்றோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ்,  இசை -  சீன் ரோல்டன். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் வட சென்னை, மாரி 2, எனை நோக்கிப் பாயும் தோட்டா, வாழ்க்கைய தேடி நானும் போனேன் (ஆங்கிலப் படத்தின் தமிழ்ப் பதிப்பு) ஆகிய படங்கள் விரைவில் வெளிவரவுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory