» சினிமா » செய்திகள்

சர்கார் படத்துக்காக 7 நாளில் டப்பிங் பேசி முடித்த விஜய்

வெள்ளி 7, செப்டம்பர் 2018 5:33:23 PM (IST)



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் படத்தின் டப்பிங்கை 7 நாட்களில் பேசி முடித்துள்ளார் விஜய். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், கிராபிக்ஸ், இசை கோர்ப்பு பணிகள் நடக்கின்றன. விஜய் 7 நாட்களில் இந்த படத்துக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். அடுத்த மாதம் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். 

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வந்த துப்பாக்கி, கத்தி படங்கள் நல்ல வசூல் பார்த்தன என்பதால் சர்கார் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் முதல் பாதியில் அமெரிக்காவில் வசிக்கும் தொழில் அதிபராகவும் அதன்பிறகு அரசியல்வாதியாகவும் விஜய் நடிப்பதாக தகவல். ஆனாலும் படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே சர்கார் படத்தின் முதல் தோற்றம் வெளியானபோது சர்ச்சையில் சிக்கியது. 

அதில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியை எதிர்த்தனர். இதனால் அந்த காட்சியை தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியது. இந்த காட்சி படத்தில் இடம்பெற்று உள்ளதா? அல்லது விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory