» சினிமா » செய்திகள்

ஆருஷி கொலை வழக்கு கதையில் ராய் லட்சுமி - அஞ்சலி!

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 10:02:16 PM (IST)ஆருஷி கொலை வழக்கை மையமாக வைத்து உருவாகும் படத்தில் அஞ்சலியும் ராய் லட்சுமியும் இணைந்து நடிக்கிறார்கள். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அஞ்சலி குடும்ப பிரச்சினை காரணமாக சில ஆண்டுகள் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது அவர் மீண்டும் நடிக்க தொடங்கினாலும் அவரது படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் இன்னும் அவர் பெயர் சொல்லும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.அதேபோல், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தாலும் ராய் லட்சுமியும் தென்னிந்திய சினிமாவி சரியான இடம் கிடைக்காமல் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தவர், பாலிவுட் வாய்ப்பு கிடைத்ததும் அங்கே செல்ல, தற்போது அங்கேயும் அவர் சும்மா தான் இருக்கிறாராம். 

இந்நிலையில், அஞ்சலியும் ராய் லட்சுமியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ஆருஷி கொலை வழக்கை மையமாக வைத்து உருவாகும் படமாகும். நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் ராஜேஷ் தல்வார் - நூபுர் தல்வார் தம்பதியின் மகளான ஆருஷி, கடந்த 2008 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி அவருடைய படுக்கை அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலை வழக்கை விசாரித்த போலீசார் பலர் மீது சந்தேகித்து இறுதியில் ஆருஷியின் பெற்றோர் மீதே சந்தேகப்பட்டு விசாரணையை வேறு விதமாக திருப்பினார்கள்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு இந்தியாவையே பரபரப்பாக்கிய இந்த கொலை வழக்கு 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இறுதியில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் ஆருஷியின் பெற்றோர் உள்ளிட்ட இந்த வழக்கில் சம்மந்தப்படுத்தப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. தற்போது இந்த வழக்கை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகிறது. இதில் ராய் லட்சுமியும், அஞ்சலியும் நடிக்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory