» சினிமா » செய்திகள்

கலைஞர் கையால் பரிசு வாங்குவேன்: சபதத்தை நிறைவேற்றிய ரஜினி!

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 5:47:15 PM (IST)

1975-ல் அடைந்த ஏமாற்றத்தை 1989-ம் ஆண்டில்  கலைஞர் கையால் பரிசு பெற்று சபதத்தை நிறைவேற்றியுள்ளார் ரஜினி. 

அபூர்வ ராகங்கள் படத்தின் வெற்றி விழாவில் கலைஞர் கருணாநிதி கையால் பரிசு வாங்க முடியாத ரஜினி ஒரு சபத்தை மேற்கொண்டார். இன்று கிடைக்கவில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் இதே கலைஞர் கையால் பரிசு வாங்கியே தீருவேன். அந்தச் சபதம், ரஜினி நடித்த ராஜாதி ராஜா படத்தின் வெற்றி விழாவில் நிறைவேறியது. 

1989-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6 அன்று, மியூசிக் அகாடமியில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் கலைஞர் கையால் பரிசு வாங்கிய ரஜினி பேசியதாவது: 1975-ல் நான் நடித்த அபூர்வ ராகங்கள் படம் 100 நாள் ஓடியது. அப்போது முதல்வர், கலைஞர்தான். வெற்றி விழாவில் அவர் கையால் எனக்குப் பரிசு வழங்கும் காட்சியைக் காண என் கண்டக்டர் நண்பர்கள் சிலரை அழைத்து வந்திருந்தேன். அவர்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் ஏதோ காரணமாக சிலருக்கு மட்டும் பரிசு வழங்கிவிட்டு முதல்வர் சென்றுவிட்டார். அன்று நானும் எனது நண்பர்களும் மிகவும் ஏமாற்றமடைந்தோம். 

அப்போதே என் மனத்துக்குள் ஒரு சபதம் எடுத்தேன்.  இன்று கிடைக்கவில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் இதே கலைஞர் கையால் பரிசு வாங்கியே தீருவேன் என்று. அது இன்று நிறைவேறியுள்ளது. சுமார் 14 வருடங்கள் கழித்து. அதே கலைஞர் கையில் அதே முதல்வர் அந்தஸ்த்தில் பரிசு பெறுகிறேன். எனது சபதம் வெற்றியடைந்துவிட்டது. எத்தனையோ முறை பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தாலும் எனது சபதம் நிறைவேறிய இந்நாளே என் வாழ்வில் பொன் நாள் என்று பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory