» சினிமா » செய்திகள்

கிழக்கு சீமையிலே படத்துக்குப் பிறகு பெருமை மிகு படைப்பு....தாணு பெருமிதம்!

செவ்வாய் 7, ஆகஸ்ட் 2018 12:12:51 PM (IST)"கிழக்கு சீமையிலே" படத்துக்குப் பிறகு  நான் பெருமைக்கொள்ளும் படைப்பாக  "60 வயது மாநிறம்" அமையபெற்றுள்ளது என தயாாிப்பாளர் தானு கூறியுள்ளார்.

தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் 60 வயது மாநிறம் என்றொரு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு,  சமுத்திரக்கனி போன்றோர் நடித்துள்ளார்கள். விஜி வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பா. விஜய், பழனி பாரதி, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். 

இந்த மாதம் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் தாணு ட்விட்டரில் கூறியுள்ளதாவது: கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக "60 வயது மாநிறம்" அமையபெற்றுள்ளது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory