» சினிமா » செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசை!!!

செவ்வாய் 7, ஆகஸ்ட் 2018 11:04:43 AM (IST)

சிவகார்த்திகேயன் படத்துக்கு முதல் முறையாக இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார் ஹிப் ஹாப் தமிழா.

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீம ராஜா’, செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘சீம ராஜா’ பணிகளை முடித்துவிட்டு, ராஜேஷ் மற்றும் ரவிக்குமார் ஆகியோரது படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜேஷ் இயக்கிவரும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கவுள்ளார் ஹிப் ஹாப் தமிழா என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், சதீஷ், ராதிகா சரத்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory