» சினிமா » செய்திகள்

திரைத்துறையில் 25 ஆண்டுகள் : இயக்குனர் ஷங்கருக்கு விழா எடுத்த உதவி இயக்குனர்கள்

புதன் 1, ஆகஸ்ட் 2018 7:58:58 PM (IST)
தமிழ் திரையுலகத்தில் அறிமுகமாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இயக்குநர் ஷங்கருக்கு அவரது உதவி இயக்குனர்கள் கூடி விழா எடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது.

பிரமாண்ட இயக்குனர் என திரையுலகினரால் கூறப்படும் இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படம் கடந்த 30.7.1993 ம் ஆண்டு வெளிவந்தது. நேற்று முன்தினம் திங்கள்கிழமையோடு ஷங்கர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.இதனைத் தொடர்ந்து ஷங்கரின் உதவி இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு நிகழ்வு நடத்த தீர்மா னித்தனர். இதை தொடர்ந்து படம் வெளியான ஜுலை 30 ம் தேதி சென்னை யிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இயக்குனர்கள் அறிவழகன், வசந்த பாலன்,பாலாஜிசக்திவேல் மற்றும் ஷங்கரிடம் பணியாற்றிய பிற உதவிஇயக்குனர்களும் சேர்ந்து விழாவை கொண்டாடியுள்ளனர்.


மக்கள் கருத்து

YaaroAug 2, 2018 - 10:05:49 AM | Posted IP 162.1*****

Atlee enga da

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory