» சினிமா » செய்திகள்

ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரத் தயாராகும் குட்டிபத்மினி

வெள்ளி 27, ஜூலை 2018 6:50:47 PM (IST)

ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரத் தயாராக இருப்பதாக பிரபல சின்னத்திரை தயாரிப்பாளர் குட்டிபத்மினி தெரிவித்துள்ளார்.
 
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் குறித்து பாலியல் புகார்கள் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. இவரை பற்றி பிரபல சின்னத்திரை தயாரிப்பாளராகவும் இயங்கி வரும் நடிகை குட்டி பத்மினி ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து முதல்முறையாக பேசியிருக்கிறார்.அவர் கூறியதாவது, ஸ்ரீரெட்டியை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. அவர் கூறுவது உண்மை தான். திரையுலகில் வாய்ப்புக்காக பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவது பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிழை தான். ஆனால், அவர் முதல் முறை தவறு நடக்கும் போதே அதைக் குறித்து புகார் அளித்திருக்க வேண்டும். முதல் முறை தவறியிருந்தால் இரண்டாம் முறையாவது புகார் அளித்திருக்க வேண்டும். 

ஆனால் ஸ்ரீரெட்டியோ வரிசையாக பலரை தன்னுடன் இருக்க அனுமதித்து விட்டு அதை ஆதாரங்களுடன் பதிவாகச் சேகரித்து வைத்துக் கொண்டு இப்போது தினம் ஒருவர் மீது பாலியல் குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.அத்தோடு ஒரு நடிகையாக தனக்கு அவர் மீது இரக்கம் இருப்பதால், தனது தயாரிப்பில் வெப் சீரிஸ்களிலோ, சின்னத்திரையிலோ நடிக்க ஸ்ரீரெட்டி விரும்பினால் வாய்ப்புத் தரத் தயாராக இருப்பதாக குட்டி பத்மினி தெரிவித்திருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory