» சினிமா » செய்திகள்

நம்மோடு வாழும் அப்துல் கலாம் ஐயா: சிவகார்த்திகேயன் நினைவஞ்சலி!

வெள்ளி 27, ஜூலை 2018 4:58:27 PM (IST)

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவு தினமான இன்று நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார் 

கடந்த 2015-ம் ஆண்டு, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க ராமேசுவரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, 3 மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அப்துல் கலாம் நினைவு தினமான இன்று அவருக்கு ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ட்விட்டரில் அவர் கூறியதாவது: கனவுகளின் வலிமையை இளைஞர்களுக்கு உணர்த்தி, இன்றும் நம் கனவுகளோடும் சிந்தனைகளோடும் செயல்களோடும் நம்மோடு வாழும் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory