» சினிமா » செய்திகள்

சர்வதேச விருது: மெர்சல் படத்திற்காக விஜய் பெயர் பரிந்துரை!!

சனி 21, ஜூலை 2018 12:54:24 PM (IST)

ஐஏஆர்ஏ என்கிற சர்வதேச விருதுப் பரிந்துரைப் பட்டியலில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது. எனினும், மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018-ம் ஆண்டுக்கான ஐஏஆர்ஏ  விருதுப் பரிந்துரைப் பட்டியல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2014 முதல் வழங்கப்பட்டு வரும் இந்தச் சர்வதேச விருதுப் பரிந்துரைப் பட்டியல்களில், இரு பிரிவுகளில் விஜய் இடம்பெற்றுள்ளார். சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என இரு பரிந்துரைப் பட்டியல்களில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார். இந்தப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் வென்ற நடிகர்கள் விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory