» சினிமா » செய்திகள்

தனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்

செவ்வாய் 17, ஜூலை 2018 4:50:32 PM (IST)என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் சசிகுமார் இணைந்திருக்கும் நிலையில் அது குறித்த சுவாரஸ்ய தகவலை கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

அச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பிறகு விக்ரமின் துருவ நட்சத்திரம், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களில் கவுதம் வாசுதேவ் மேனன் கவனம் செலுத்தி வருகிறார். இதில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் 90% பணிகள் முடிந்திருக்கின்றன. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் மீதமிருந்த நிலையில் தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று (ஜூலை 16) துவங்கியது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமாரும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஷூட்டிங்கில் இருப்பதைவிட அர்த்தமுள்ள விஷயம் ஒன்றுமில்லை. நடிகர் தனுஷ், சசிகுமார் ஆகியோருடன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் கடைசி கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. அப்போதுதான் இந்தப் படத்தில் மூன்று இயக்குநர்கள் இணைந்திருப்பதை உணர்ந்தேன்" என்று தெரிவித்துள்ளார். மும்பையில் 5 நாட்கள் சென்னையில் 5 நாட்கள் என தொடர்ந்து பத்து நாட்களில் படப்பிடிப்பை நடத்தி, படத்தை முடிப்பதற்கான வேலையில் கவுதம் மேனன் இறங்கியுள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory