» சினிமா » செய்திகள்

ரஜினியின் 2.O ரிலீஸ் தேதி: இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு

புதன் 11, ஜூலை 2018 12:13:01 PM (IST)

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.O திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’  கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது. கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. தற்போது படத்தின் இயக்குனர் ஷங்கர், கிராபிக்ஸ் பணிகள் விரைவில் முடிய இருப்பதாகவும், அதனால் படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory