» சினிமா » செய்திகள்
பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை எதிரொலி: சர்கார் போஸ்டரை நீக்கியது சன் பிக்சர்ஸ்!!
வெள்ளி 6, ஜூலை 2018 5:42:29 PM (IST)
பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் எதிரொலியாக , ‘சர்கார்’ போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளது.

ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளாக நடித்திருப்பதால், இந்தப் படம் அரசியலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் (ஜூன்) 21-ம் தேதி மாலை இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டது. முதன்முதலாக வெளியிடப்பட்ட போஸ்டரில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இந்த போஸ்டருக்கு பலரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, 2007-ம் ஆண்டு, ‘இனிமேல் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார் விஜய். அந்த செய்தி, சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பாமகவைச் சேர்ந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ‘சர்கார்’ போஸ்டரைக் கண்டித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், படத்தில் இருந்து அந்தக் காட்சியை நீக்குமாறு தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலைத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு, விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. புகைப்பழக்கத்தை இளைஞர்களிடம் இருந்து அறவே ஒழிக்க அரசு மேற்கொண்டு வரும் முதற்கட்ட முயற்சிக்கு திரையுலகினர் ஒத்துழைக்க வேண்டுமென பொது சுகாதாரத்துறை சமீபத்தில் கேட்டுக் கொண்டது.
இதன் எதிரொலியாக அந்த போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘துப்பாக்கி’ படத்திலும் இப்படி சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியானது. ஆனால், இந்த அளவுக்கு அப்போது எதிர்ப்பு எழவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை: நடிகர் ஜெய்
சனி 16, பிப்ரவரி 2019 5:47:14 PM (IST)

ஆபாச வார்த்தைகளுடன் சுவரொட்டிகள்: விஜய்சேதுபதி வருத்தம்
சனி 16, பிப்ரவரி 2019 10:56:27 AM (IST)

சிவகார்த்திகேயனின் Mr. லோக்கல் மே 1-ஆம் தேதி ரிலீஸ்!!
வியாழன் 14, பிப்ரவரி 2019 4:05:23 PM (IST)

சாயிஷாவுக்கு காதலர் தின வாழ்த்து: திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா!!
வியாழன் 14, பிப்ரவரி 2019 12:46:10 PM (IST)

ரவுடி பேபி பாடல் இமாலய சாதனை: நடிகர் தனுஷ் நன்றி!
புதன் 13, பிப்ரவரி 2019 5:58:49 PM (IST)

கந்து வட்டி கும்பலுடன் தொடர்பா? - இயக்குநர் புகார் குறித்து நடிகர் கருணாகரன் வேதனை
புதன் 13, பிப்ரவரி 2019 4:55:03 PM (IST)
