» சினிமா » செய்திகள்

சூர்யா - கே.வி. ஆனந்த் படத்தில் இணைந்துள்ள ஆர்யா!

வியாழன் 5, ஜூலை 2018 10:33:30 AM (IST)



கே.வி. ஆனந்த் இயக்கத்தில்  சூர்யா நடிக்கும் படத்தில் ஆர்யாவும் இணைந்துள்ளார். 

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படத்தில் மோகன் லால் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மோகன்லால், கடைசியாக 2014-ல் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு இப்போதுதான் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷும் இணைந்துள்ளார். 

அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் இணைகிறார்கள். ஒரு படத்தின் தோல்விக்குப் பிறகு அப்படத்தின் நடிகர் - இயக்குநர் கூட்டணியை மீண்டும் காணமுடியாது. ஆனால் மாற்றான் படம் வெற்றியடையாவிட்டாலும் கே.வி.ஆனந்துடன் மீண்டும் இணைகிறார் சூர்யா.லைக்கா தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், அயன், மாற்றான் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். அதன்பிறகு மீண்டும் கே.வி. ஆனந்த் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் ஆர்யாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory