» சினிமா » செய்திகள்

அஜித்தின் விசுவாசம் படத்தில் முக்கிய வேடத்தில் விவேக்

திங்கள் 2, ஜூலை 2018 11:39:56 AM (IST)

சிவா இயக்கத்தில் அஜித்குமாரின் விசுவாசம் படத்தில் முக்கிய வேடத்தில் விவேக்  நடிக்கிறார்.

அஜித்குமார் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில், 30 நாட்கள் நடைபெற்றது. அஜித்குமார்–நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளை டைரக்டர் சிவா படமாக்கினார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும், அஜித்குமார் சென்னை திரும்பினார்.

தற்போது 2–வது கட்ட படப்பிடிப்புக்காக அவர் மீண்டும் ஐதராபாத்துக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் விவேக்கும் ஐதராபாத் சென்றார். இந்த படத்தில், விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவும் கலந்து கொள்கிறார். அவர் இந்த படத்தில் டாக்டராக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory