» சினிமா » செய்திகள்

இந்தியன் 2-வில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா?...

சனி 30, ஜூன் 2018 2:36:27 PM (IST)

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2-வில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இந்தியன்’. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா நடித்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. 

‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சினிமா வட்டாரங்கள் இதை உறுதி செய்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory