» சினிமா » செய்திகள்

பாலியல் சர்ச்சை: ஷகிலா படத்துக்கு சென்சார் குழு தடை

வெள்ளி 15, ஜூன் 2018 12:23:54 PM (IST)

நடிகை ஷகிலா நடித்துள்ள சீலாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்து திடீர் தடை விதித்து உள்ளது.

ஒரு காலத்தில் மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமான ஷகிலாவுக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது.  கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களே ஷகிலா படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அவர்கள் படங்களை வசூலில் ஷகிலாவின் படங்கள் பின்னுக்கு தள்ளின.

ஷகிலா படங்களுக்கு தியேட்டர்கள் நிரம்பி வழிந்ததால் பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்த சம்பவங்களும் நடந்தன. ஷகிலாவின் ஆபாச படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்களும் நடந்தன. பின்னர் அவர் சென்னைக்கு வந்து தமிழில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் தயாராகி உள்ள ‘சீலாவதி’ என்ற திகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை ஸ்ரீராம் தாசரி டைரக்டு செய்துள்ளார். 

படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கேரளாவில் நடந்த சில பாலியல் குற்ற உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சீலாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்து திடீர் தடை விதித்து உள்ளது. படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தணிக்கை குழுவை ஷகிலா கண்டித்துள்ளார். "படத்தை பார்க்காமலேயே தணிக்கை குழு தடை விதித்து இருக்கிறது. இந்த படத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்” என்று அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory