» சினிமா » செய்திகள்

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்சனை வந்தால் எதிர்கொள்ள தயார்: கமல்

செவ்வாய் 12, ஜூன் 2018 5:28:25 PM (IST)

விஸ்வரூபம் 2 படத்திற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்தால் ஒரு அரசியல்வாதியாக அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாஸன் எழுதி, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 பட ரிலீஸ் தள்ளிப் போனது உள்ளிட்டவை குறித்து கமல் ஹாஸன் பேசியுள்ளார்.  

அவர் கூறியதாவது:  விஸ்வரூபம் 2 படம் தாமதமாக வெளியாவதற்கு ராஜ் கமல் பிலிம்ஸ் காரணம் இல்லை. முதல் விஸ்வரூபம் தாமதமானதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். கிட்டத்தட்ட அதே காரணங்கள் தான் தொடர்ந்தன. என் அண்ணன் சந்திரஹாஸன் தன்னுடைய முழு சாராம்சத்தை என்னுள் இறக்கிவிட்டுத் தான் சென்றுள்ளார். அவர் என்னுடனேயே இருப்பது போன்று இருக்கிறது. அவர் இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. விஸ்வரூபம் 2 பல்லாயிரம் பிரிண்டுகளுடன் இந்தியா முழுவதும் வெளியாகப் போகும் படம். ஹாலிவுட் படத்திற்கு நிகரான பிரிண்டுகளுடன் வெளியாகிறது. 

இந்த படத்தில் நானும் ஒரு பாடல் எழுதியுள்ளேன் என்பது பெருமை. விஸ்வரூபம் படம் போன்று இதற்கு பிரச்சனை வராது என்று நினைக்கிறேன். வேறு ஒரு பெயரில் உருவம் மாற்றி மாறுவேடத்தில் வந்த எதிர்ப்பு தான் அது. அவர்களின்பால் இருந்து வரவில்லை என்பது பின்னர் நிரூபணம் ஆனது. அது அரசியல். இதில் அரசியல் வந்தால் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்திருக்கிறேன். அரசியல்வாதியாக அதை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளேன்.

இது விஸ்வரூபத்தின் தொடர்ச்சி மட்டும் அல்ல முன்கதையும் இதில் இருக்கிறது. நான் படத்தை படமாக பார்க்கிறேன், அரசியலை அரசியலாக பார்க்கிறேன். அதை அவர்கள் குழப்பிக் கொண்டால் நான் பொறுப்பல்ல. இந்த படத்தில் வீண் பேச்சு இருக்காது, ஆக்ஷன் நிறைய இருக்கும். உணர்வுகள் நன்றாக புரியும். விஸ்வரூபம் படத்தை முன்கூட்டியே திரையிட்டு காட்டும்படி வற்புறுத்தப்பட்டேன். தற்போது அது இருக்காது என்று கமல் ஹாஸன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory