» சினிமா » செய்திகள்

இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க சீரியல்!

சனி 9, ஜூன் 2018 9:43:38 PM (IST)பிரியங்கா சோப்ரா நடித்து வரும் ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்க சீரியல் தயாரிப்பு நிறுவனம் இந்தியர்களின் மன்னிப்பு கேட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். உலக அளவில் பிரபலமாக இருக்கும் இந்த சீரியலில் அவர் சி.ஐ.ஏ அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல் எபிசோட் ஒன்றில், இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாகிஸ்தானியர் போல நடித்து நியூயார்க் நகரில் அணு குண்டை வெடிக்க சதி செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
 
இந்த காட்சிக்கு இந்தியர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் சீரியலுக்கு எதிராக பதிவிட்டு வந்தார்கள். எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வந்த நிலையில், சீரியல் தயாரிப்பு நிறுவனம் இந்தியர்களின் மன்னிப்பு கேட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory