» சினிமா » செய்திகள்

கார்த்திக் சுப்பராஜ் படத்துக்கு அனிரூத் இசை: சந்தோஷ் நாராயணன் கருத்து!

சனி 9, ஜூன் 2018 4:35:27 PM (IST)

கார்த்திக் சுப்பராஜுக்கு சூப்பர் ஆல்பம் கிடைக்கப் போகுது’ என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார். 
 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘மெர்க்குரி’ என 4 படங்களுக்கும் இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ஆனால், கார்த்திக் சுப்பராஜ் தற்போது ரஜினியை வைத்து இயக்கிவரும் படத்துக்கு, அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
எனவே, முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் தவிர்த்து வேறொரு இசையமைப்பாளருடன் பணியாற்றுகிறார் கார்த்திக் சுப்பராஜ். இதுகுறித்து சந்தோஷ் நாராயணனிடம் கேட்டபோது, "கார்த்திக் சுப்பராஜுக்கு ஒரு சூப்பர் ஆல்பம் கிடைக்கப் போகிறது. எனக்கு அனிருத் மியூஸிக் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory