» சினிமா » செய்திகள்

குஷ்புவை விட சுந்தர்.சி-யின் மனம் கவர்ந்த நடிகை

செவ்வாய் 15, மே 2018 11:18:55 PM (IST)



திரையுலக தம்பதியான நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர்.சி, தமிழ் ரசிகர்களுக்கு பித்த ஜோடி ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது குஷ்பு நடிப்பு, அரசியல், திரைப்படங்கள் தயாரிப்பு என்று பிஸியாக இருந்தாலும், குடும்பத்தை கவனித்துக் கொள்வதிலும் வல்லவராக திகழ்கிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட இயக்குநர் சுந்தர்.சி, குஷ்புவை விட தனக்கு மிகவும் பிடித்த நடிகை குறித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சுந்தர்.சி-யிடம் சில நாயகிகளின் புகைப்படங்களை காட்டினர். அப்போது மறைந்த நடிகை சௌந்தர்யா புகைப்படத்தை காட்ட, அந்த நேரத்தில் சுந்தர்.சி கொஞ்சம் எமோஷ்னல் ஆனார். 

பிறகு பேசியவர், "குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் கண்டிப்பாக இந்த பெண்ணிடம் என் காதலை கூறியிருப்பேன். அந்த அளவிற்கு எனக்கு பிடித்த நாயகி அவர், எப்போதும் சௌந்தர்யாவுடன் அவருடைய அண்ணன் இருப்பார், இறக்கும் போது கூட இருவரும் சேர்ந்து இறந்துவிட்டனர்.” கவலையுடன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory